Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புலிக்கு 30 கோடி... தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் 2வது நாயகனா விஜய்?

 புலி படத்தின் மூலம் விஜய்யின் சம்பளம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘புலி’. படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத். 

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் முறையே ஜூன் மாதம் 21, 22 தேதிகளில் வெளியானது. இதுவரை 53 லட்சத்தை இந்த டீஸர் கடந்துள்ளது. இதற்கு முந்தைய படமான கத்தி படம் 100 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.மேலும் விஜய் படங்களுக்கு கேரள சினிமா ரசிர்கள் மத்தியிலும் வரவேற்புகள் இருப்பது நாமறிந்ததே. 

தன்னை வெறித்தனமாக நேசிக்கும் ரசிர்கர்கள் , ஓபனிங் மாஸ் வசூல், என விஜய் தமிழ் சினிமாவின் டாப் நடிகர். இதையெல்லாம் வைத்து அந்த படத்தைத் தொடர்ந்து இப்போது உருவாகிவரும் ‘புலி’ படத்தில் நடித்தமைக்காக கலைப்புலி S தாணு விஜய்க்கு 30 கோடிக்கான காசோலை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சென்ற வருடம் இரண்டு படங்கள், டாப் 10 பாடல்கள் லிஸ்டில் விஜய்யின் ஜில்லா, கத்தி, 100 கோடி வசூல் என விஜய்யின் சம்பளம் தற்போது உயர்ந்திருந்தாலும் அதில் ஆச்சர்யம் இல்லை என்றே கூறலாம். 

இவருக்கு முன்பு ரஜினிகாந்த் முதலிடத்தில் இருக்கிறார். ’எந்திரன்’ படத்தின் போதே ரஜினியின் சம்பளம் 40 முதல் 45 கோடி என சொல்லப்பட்டது. இந்நிலையில் அவரைத் தொடர்ந்து விஜய் 30 எனில் 2ம் இடம் விஜய் தான். மற்றவர்கள் 15 கோடி முதல் 22 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்கள் என்பது பலரும் அறிந்ததே. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close