Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய் படத்தில் சுனைனா நடிக்கிறார்

 அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஜூலை முதல்தேதி தொடங்கியது படப்பிடிப்பு.

முதலில் விஜய் மட்டும் இருக்கும் பாடல்காட்சி ஒன்றை சில நாட்களில் படமாக்கி முடித்தார்களாம். அதைத் தொடர்ந்து வசனக்காட்சிகளை படமாக்கிக்கொண்டிருக்கிறார்களாம். இந்தப்படத்தில் நாயகிகளாக சமந்தா, எமிஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருக்கிறார்கள்.

இவர்களோடு சுனைனாவும் படத்தில் இருக்கிறாராம். ஏற்கெனவே இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள், சுனைனா என்ன செய்யப்போகிறார்? என்று கேட்டால், விஜய் பெண் பார்க்கப்போகிற மாதிரி ஒரு காட்சி படத்தில் வருகிறதாம். அந்தக்காட்சியில் பெண்ணாக சுனைனா நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதற்காக ஒருநாள் மட்டும் அவர் நடிக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள். மிகச்சிறிய வேடம் என்றாலும் விஜய் படத்தில் நடிக்கிறோம் என்பதால் சந்தோசமாக நடிக்க ஒப்புக்கொண்டாராம் சுனைனா.

அந்தக்காட்சியில் விஜய், ராதிகா ஆகியோரோடு நடிப்பதில் சந்தோசம் என்று அவர் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close