Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷங்கர் படத்தில் நடிக்கிறாரா விக்ரம் மகன்?

 விக்ரமின் மகன் த்ரவ் ,  விரைவில் நடிக்க இருப்பதாகவும் அதிலும் ஷங்கர் படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நெருங்கிய வட்டங்களில் விசாரித்ததில், ஷங்கர் தனது தயாரிப்பில் விக்ரமின் மகனை அறிமுகம் செய்து ஒரு படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

படத்தின் இயக்குநர் யார் என்பது இன்னும் தகவல்கள் ஏதும் இல்லை. மேலும் ஷங்கருக்கு விக்ரமின் மீது தனி ஈடுபாடு இருப்பது நாமறிந்ததே. இந்நிலையில் அவரது மகனை வைத்து ஒரு படம் தயாரித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. 

டீனேஜ் வயதில் இருக்கும் த்ரவ் சின்ன வயது விக்ரமை அப்படியே அப்பட்டமாக கண்முன் கொண்டு வருகிறார். மேலும் தந்தையைப் போலவே இவருக்கும் சினிமா ஆர்வம அதிகமாக இருக்கிறதாம். எனவே விரைவில் அவரும் நடிப்பில் இறங்கிவிடுவார் என்றே கூறப்படுகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் ’எந்திரன் 2’ படத்தில் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்