Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தயாரிப்பாளர்சங்கத்தின் முடிவால் சின்னபட்ஜெட் படங்களுக்குப் பாதிப்பா?

ஜூலை 24 முதல் தனியார் தொலைக்காட்சிகளுக்குப் புதியபடங்களின் முன்னோட்டங்கள், பாடல்கள் மற்றும் நகைச்சுவைக்காட்சிகள் உட்பட எதையும் தரக்கூடாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.

படங்களின் ஒளிபரப்புஉரிமையை வாங்கும் தொலைக்காட்சிக்கு மட்டும் இவற்றைத் தரலாம் என்றும் சொல்லியிருக்கிறது. அதோடு தொலைக்காட்சிவிளம்பரங்களுக்கும் ஒரு வரையறை விதித்திருக்கிறது தயாரிப்பாளர்கள்சங்கம். இது சரியா? தவறா? என்கிற விவாதங்களும் எழுந்திருக்கின்றன. சின்னப்படங்களைத் தொலைக்காட்சிகள் வாங்குவதில்லை என்பதாலேயே இந்தமுடிவை தயாரிப்பாளர்கள்சங்கம் எடுத்திருக்கிறதென்றாலும், இந்த முடிவால் பாதிக்கப்படப்போவதும் சின்னப்படங்கள்தாம் என்றும் சொல்கிறார்கள்.

பெரியநடிகர்களின் படங்களுக்கு முன்கூட்டியே பாடல்களையோ, நகைச்சுவைக்காட்சிகளையோ கொடுத்து விளம்பரம் செய்யவேண்டிய தேவையில்லை. அதேநேரம் சின்னப்படங்களுக்கு மக்களை உள்ளே ஈர்க்க முன்கூட்டியே சில காட்சிகளைக் காட்டிக்கொண்டிருந்தார்கள். தயாரிப்பாளர்கள்சங்கத்தின் தற்போதைய முடிவின்படி அதைச் செய்யக்கூடாது என்பதால் இந்தப்படங்களைப் பற்றி மக்களுக்குத் தெரியாமலே போய்விடுமே என்கிற கவலையை எழுப்புகிறார்கள்.

ஜூலை 24 ஆம் தேதிக்குப் பிறகு தங்கள் படங்களை வெளியிடலாம் என்று நினைத்திருக்கிற தயாரிப்பாளர்கள் இதுகுறித்து கடும்அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் முடிவுகளால் பெரியபடங்களுக்கு எப்போதும் பாதிப்பு ஏற்படுவதில்லை, சின்னப்படங்கள்தாம் பாதிப்புக்கு ஆளாகின்றன என்றும் சொல்கிறார்கள்.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள்தரப்பில் சிலரை வைத்து ஒரு குழுவும், தொலைக்காட்சிகள் தரப்பில் ஒரு குழுவையும் அமைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவு எடுக்கலாம் என்றும் சொல்கிறார்கள். தயாரிப்பாளர்களின் இந்தக்கவலையைக் கவனத்தில் கொள்ளுமா தயாரிப்பாளர்கள் சங்கம்?

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close