Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சர்ச்சையில் சிக்கிய வி.எஸ்.ஓ.பி பட டீஸர்

ஆர்யா, சந்தானம் நடிப்பில் இயக்குநர் ராஜேஷின் அடுத்த படம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க. இப்படத்திற்கான டீஸர் நேற்று வெளியாகி பெரும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குநர் ராஜேஷ். பாஸ் என்கிற பாஸ்கரன், ஒருகல் ஒரு கண்ணாடி என்று தொடர்ந்து அடுத்தடுத்து காமெடி கலந்த படங்களின் மூலம் ஹிட் அடித்தார். ஆல் இன் ஆல் அழகுராஜா படம் ஓடவில்லை. இருந்தாலும் ஒரு பக்கம் இவர் படங்களில் அதிகமாக மது அருந்தும் காட்சிகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிகமாக மதுவை ஊக்கப்படுத்தும் விதமாக இருக்கிறது என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

சமீபத்தில் சிறுவனுக்கு மது ஊற்றி கொடுத்து குடிக்கவைத்த வீடியோ காட்சி பரபரப்பாக பகிரப்பட்டு எதிர்ப்பு கிளம்பியது, மேலும் பள்ளி மாணவி குடித்துவிட்டு போதையில் கலாட்டா செய்த செய்தி என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் மக்கள் மத்தியில்  மது மீதான  எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் டீஸர் வெளியானதைத் தொடர்ந்து சமுக வலைத்தளங்களில் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டீஸரில் வந்த காட்சிகள் மதுவை மேலும் ஊக்குவிக்கும், காதல் தோல்வி என்றாலும் மது, கல்யாண வீடென்றாலும் மது என்று இளைஞர்களை கெடுப்பது சினிமா தான் என்று இணையத்தில் ரசிகர்கள் கருத்தை தெரிவித்துவருகின்றனர். இதற்கு நடுவில் சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள் என்றும் ஒரு சாரார் கருத்து தெரிவித்துவருகின்றனர். இருப்பினும் மது ஒழிக்கவேண்டிய ஒன்று. தற்பொழுது இருக்கும் தொழில் நுட்பமும் வளர்சியும் சிறுவர்களையும் மதுவில் இழுத்துக் கொண்டு செல்கிறது. இதற்கு தூண்டுகோலாக இதுபோன்ற படங்கள் இருக்கின்றன என்பதே இணைய ரசிகர்களின் ஒருமித்த கருத்தாக இருக்கிறது.

எடிட்டர் சாய்ஸ்

[X] Close