Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மிணியாக சுப்புலட்சுமி!

அரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் இயக்கிவரும் அடுத்தப் படம் அம்மணி.

அவர் இயக்கிய படங்களில் அவர் நடித்தது கிடையாது. முதல் முறையாக இயக்கி அதே படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார் லெட்சுமி ராமகிருஷ்ணன்.

அதுமட்டுமில்லாமல் நடிகை சுப்புலட்சுமி  இப்படத்தில் நடிக்கிறார். அவர் தான் இப்படத்தில் உள்ள அம்மணி கதாப்பாத்திரம் என்கிறார் இயக்குநர் லட்சுமிராமகிருஷ்ணன். 82 வயதிலும் அசராமல் டப்பிங் வேலையில் அசத்திருயிருக்கிறார். அவருக்கான டப்பிங் வேலைகள் தற்பொழுது முடிந்திருக்கிறது.

சமீபத்தில் சொல்லுவதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவந்தார். அப்போது அவர் கேட்டறிந்த உண்மைச் சம்பவங்களின் மையத்திலேயே இப்படம் உருவாகிவருகிறதாம்.

சமுகம் சார்ந்த கதையாகவும், பெண்களுக்கு பக்க பலமான கருத்தோட்டத்துடன் இப்படம் தயாராகிவருகிறது என்று சொல்லப்படுகிறது. விரைவில் திரையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close