Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் தயாரிப்பாளரானது பெரிய கதை! ஆரஞ்சுமிட்டாய் செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி!

யாருமே தயாரிக்க முன்வராத நேரத்துல நல்ல கதையாக இருக்கிறதே நாமே களம் இறங்கி பார்த்துவிடலாம் என்று நானே தயாரித்துவிட்டேன் என்கிறார் விஜய்சேதுபதி. அவரே நடித்து அவர் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் படம் ஆரஞ்சு மிட்டாய். இப்படத்தை இயக்கி, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு செய்தவர் பிஜூ விஸ்வநாத்.

இப்படத்திற்கான செய்தியாளர் சந்திப்பில் விஜய்சேதுபதி பேசும்போது, “ முதலில் இப்படத்தின் கதையோடு பிஜூ விஸ்வநாத் என்னிடம் அணுகினார். அப்போது தயாரிப்புக்காக நானே நான்கு தயாரிப்பாளரிடம் அனுப்பினேன். ஆனால் அவர்கள் இப்படத்தில் கமெர்சியல் குறைவாக இருப்பதாக சொன்னார்கள். பின்னர் நானும் எடுத்துக் கூறினேன். நல்ல படமா இருக்கிறது. யாரும் தயாரிக்க முன்வராத நேரத்தில் நாமே தயாரித்தால் என்ன என்றே களத்தில் இறங்கிவிட்டேன். இது தான் நான் தயாரிப்பாளர் ஆன கதை என்று சிரிக்கிறார் விஜய்சேதுபதி.

தொடர்ந்து , “ இந்தப் படத்தில் மூன்றே கதாப்பாத்திரங்கள். நான் தான் அந்த வயசான தாத்தா, ரமேஷ் திலக் மற்றும் ஆறுமுகம் பாலா. ரமேஷ் திலக்குக்கு மட்டும் தான் இந்தப்படத்துல ஜோடி இருக்கு. ரொமான்ஸ் காட்சிகள்லாம் இருக்கும். அப்புறம் ஒரு ஆம்புலன்ஸ் அவ்வளவு தான். படத்துல ஃப்ளாஸ் பேக் கதை, என்னோட ஹீரோயிசம் என்று ஏதும் கிடையாது. எனக்கு இந்த ஒரே கெட்டப் தான் என்று தெளிவாக படத்தைப் பற்றி விளக்கினார் விஜய்சேதுபதி.

நயன்தாராவுடன் கதாநாயகனாக நடிக்கிறீகள். இப்படி வயதான கதாப்பாத்திரத்தில் நடிப்பது உங்கள் எதிர்காலத்தை பாதிக்குமா?

படம் இது தான். கதையும் இதான். நான் இந்த கெட்டப்புல தான் நடிக்கிறேன் என்று முதல்லேயே சொல்லிவிடுவதால் ஏதும் தப்பா இருக்காது என்று நம்புகிறேன். கண்டிப்பா என் படத்தை ரசிப்பாங்க. ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிப்பீர்களா?

கண்டிப்பா படம் தயாரிப்பேன். ரொம்ப சூப்பரா படத்தை எடுக்கலாம் ஆனால் அவர் சம்மதித்தால் மட்டுமே!.

2020 வரைக்கும் நீங்க பிஸியாமே?

அப்படி யார் சொன்னதுனு தெரியலை சார். அந்த நல்ல மனிதரைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இந்தப் படத்தில் உங்களுக்கு ஜோடி இல்லை என்று ரசிகர்கள் வருத்தப்படமாட்டாங்களா?

அப்படியெல்லாம் கிடையாது. படத்தைப் பார்த்தால் புரியும். நல்ல கதை. ஆரஞ்சு மிட்டாய் நிச்சயம் உங்களை ரசிக்கவைக்கும். தியேட்டரில் வந்து பாருங்க என்று முடித்தார் விஜய்சேதுபதி.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close