Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தள்ளிப்போகிறது தனிஒருவன் இசை வெளியீடு!

ஜெயம்ரவியுடன் நயன்தாரா முதன் முறையாக சேர்ந்து நடிக்கும் படம் தனிஒருவன். ஜெயம், எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கு எனக்கும், என்று தொடர்ந்து ஹிட் படங்களை தன் தம்பியை வைத்து இயக்கியவர் ஜெயம் ராஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் இப்படம் உருவாகிவருகிறது.

நீண்ட நாட்கள் படப்பிடிப்பு கிடப்பில் கிடந்து மீண்டும் தொடங்கி வேகமாக முடிந்துவருகிறது. இதற்கு நடுவே இப்படத்தின் இசைவெளியீட்டு விழா ஜூலை 15ம் தேதி என்று கூறியிருந்தார்கள். தற்பொழுது இசை வெளியீட்டு விழா தள்ளிச் சென்று ஜூலை 22ம் தேதி ஆல்பம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்‌ஷன் கலந்த இப்படத்திற்கு ஆதி இசையமைக்கிறார். ஆம்பள, இன்று நேற்று நாளை படத்தைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழன் ஆதிக்கு வெளியாகவிருக்கும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ராஜா இப்படத்திலிருந்து தன் பெயரை மோகன் ராஜா என்று மாற்றவிருக்கிறார். நயன்தாரா , அரவிந்த் சாமி, கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். ராம்ஜி ஒளிப்பதிவில் வி.டி.விஜயன் படத்தொகுப்பில் விரைவில் வெளியாகவிருக்கிறது ’தனி ஒருவன்’.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close