Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உங்கள் பிரார்த்தனை மூலம் என் நண்பன் மீண்டும் எழுந்து வர வேண்டும்: விஜயகாந்த்

உங்கள் பிரார்த்தனை மூலம் என் நண்பன் இப்ராகிம் ராவுத்தர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ராமநாதபுரத்தில் நடந்த இஃப்தர் நோன்பு நிகழ்ச்சியில் கேட்டுக் கொண்டார்.

தே.மு.தி.க. சார்பில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்சியில் பங்கேற்க வந்த தே.தி.மு.க தலைவர் விஜயகாந்தை, விருந்து மண்டபத்தில் கூடியிருந்த தே.மு.தி.க. தொண்டர்கள் வரவேற்றனர். அதன் பின் விழா மேடைக்கு சென்ற விஜயகாந்துக்கு இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி வழங்கப்பட்டது. அதனை வாங்கி தலையில் அணிந்து கொண்டார் விஜயகாந்த்.

இதை தொடர்ந்து மாவட்ட செயலாலர் சிங்கை ஜின்னா வரவேற்புரை ஆற்றினார். விஜயகாந்தின் நண்பரும் வழக்கறிஞருமான பிஸ்மில்லாகான், விஜயகாந்தின் குண நலன்கள் குறித்து பேச, அதற்கு விஜயகாந்த ‘மோனா ஆக்டிங்’கில் விளக்கம் கொடுத்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர் பேசிய விஜயகாந்த், ''இறைவனின் கட்டளைப்படியே ராமநாதபுரத்தில் இஃப்தார் விருந்து நடத்துகிறேன். இறைவன் நேரடியாக சொல்லவில்லை. எனது கட்சி நிர்வாகிகள் மூலம் சொல்ல வைத்தார். நான் எப்போதும் சிறுபான்மையினருக்கு துணையாக இருப்பேன்.

தீயவைகளை அழிப்பதே நோன்பின் மான்பாக சொல்லப்பட்டுள்ளது. அதை நீங்கள் செய்ய வேண்டும். நானும் அதைதான் செய்கிறேன். எனது நண்பன் இப்ராகிம் ராவுத்தர் உடல் நலகுறைவாக இருக்கிறான். உங்களது பிரார்த்தனை மூலம் அவன் மீண்டும் எழுந்து வர வேண்டும்" என்றார்.

இதையடுத்து, சிறப்பு தொழுகையும், அதனை தொடர்ந்து நோன்பு விருந்தும் நடந்தது. இந்த நிகழ்ச்சிகளில், ஏராளமான இஸ்லாமியர்களும், தே.மு.தி.க தொண்டர்களும், பெண்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close