Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பெங்களூர் டேஸ் தமிழ் ரீமேக் டைட்டில் ADMK வா?

மலையாளத்திலிருந்து தமிழுக்கு ரீமேக் செய்யப்படும் படங்கள் அடுத்தடுத்து ஹிட் அடித்துவருகிறது. ஹவ் ஓல்டு ஆர் யூ படத்தின் தமிழ் ரீமேக்கான 36 வயதினிலே, த்ரிஷ்யத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசம் என்று ரீமேக் படங்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது.

இதைத் தொடர்ந்து நஸ்ரியா, துல்கர் சல்மான், பகத் பாசில் மற்றும் நிவின் பவுலி என்று ஸ்டார் நட்சத்திரங்களின் நடிப்பில் மலையாளத்தில் ஹிட் அடித்த பெங்களூர் டேஸ் படமும் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இதில் நஸ்ரியா கதாப்பாத்திரத்தில் ஸ்ரீதிவ்யா மற்றும் ராணா, ஆர்யா மற்றும் பாபி சிம்ஹா நடிப்பில் படமாக்கப்பட்டுவருகிறது.

பாஸ்கர் இயக்கிவரும் இப்படத்திற்கு அர்ஜூன் திவ்யா மற்றும் கார்த்திக் என்று பெயரிடலாம் என்று முடிவிடுத்துள்ளார்களாம். சுருக்கமாக ADMK என்று பெயரிடலாம் என்று யோசித்துவருகிறார்களாம். இப்பெயர் படத்தின் கதாப்பாத்திரத்தின் பெயர்களின் சுருக்கம் என்றாலும் அரசியல் கட்சி சார்ந்த பெயர் என்பதால் அனுமதி பெற்றப் பின்னரே பெயரிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறதாம் படக்குழு.

இத்தலைப்பு அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதியாகவில்லை. மேலும் தலைப்பு மாற்றப்படவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தலைப்பு உறுதியானதுமே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்