Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அஜித் படத்தின் பெயர் வரம்?

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இத்தாலியில் நடந்துமுடிந்துவிட்டது. அங்கிருந்து படக்குழவினர் சென்னை வந்துவிட்டனர். இதற்கடுத்தகட்டப் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடக்கவிருக்கிறதாம்.

ஆகஸ்ட் முதல்வாரத்தில் அங்கு தொடங்கப்படும் கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் மூன்றாம்கட்டப்படப்பிடிப்பின்போது மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. இரண்டுகட்டப் படப்பிடிப்புகள் முடிவடைந்தபின்னும் இன்னும் படத்துக்குப் பெயர் வைக்கவில்லை.

இந்தப்படத்துக்காக வழக்கம்போல ஏராளமான பெயர்களை எழுதி வைத்திருக்கிறார்களாம். அவற்றில் வரம் என்கிற பெயர் அஜித்துக்குப் பிடித்துவிட்டதாம். கதைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று அவர் நினைக்கிறாராம். அதிசயம் ஆனால் உண்மை என்பது போல அஜித்துக்குப் பிடித்த பெயர் மற்றவர்களுக்கெல்லாம் பிடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தப்பெயரில் மிகவும் மென்மையாக இருக்கிறது அதனால் இன்னும் கொஞ்சம் வேகமான பெயராக வைக்கலாம் என்று மற்றவர்கள் சொல்கிறார்களாம். அதனால் அஜித்தும், இந்தப் பெயரை விடப் பொருத்தமாக வேறு பெயர் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறாராம். அதனால் இன்னும் சில பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்