Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக நாளை படப்பிடிப்புகள் ரத்து!

சென்னை தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த இசையமைப்பாளர் எம்.எஸ்., விஸ்வநாதன், இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார்.

தமிழ்த் திரையுலகில் அழிக்கமுடியாத பொக்கிஷம், இசையுலகின் முடிசூடா மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். இவரின் இழப்பு திரையுலகையே ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. பல கட்சித்தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்து அவருடைய ஆத்மா சாந்தியடைய தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக இறைவனை பிரார்த்தனை செய்வதோடு, அவரது குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை படப்பிடிப்புகளை ரத்து செய்வதாகவும் தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Related Tags

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close