Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்எஸ்விக்கு மெல்லிசைமன்னர் பட்டம் தந்தது சிவாஜிகணேசன் - இரங்கல் குறிப்பில் தயாரிப்பாளர் தாணு தகவல்

மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இரங்கல் தெரிவித்து திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் தாணு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்...

எம்.எஸ்.விஸ்வநாதன் முதன் முறையாக டி.கே.இராமமூர்த்தி அவர்களுடன் இணைந்து பணம் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். இவர்கள் இருவரும் இணைந்து 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்கள். 1963ம் ஆண்டு மதராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசன் அவர்களால் விசுவநாதன் - இராமமூர்த்திக்கு “மெல்லிசை மன்னர்கள்” என்ற பட்டம் வழங்கப்பட்டது. திரைத் துறையில் மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி உள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் மறக்க முடியாத எத்தனையோ காலத்தால் அழியாத பாடல்களைக் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர். இவரது மறைவு ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலம் மட்டுமல்லாது தென்னிந்திய திரையுலகிற்கே பெரிய இழப்பாகும். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்திற்கும், ரசிகப் பெருமக்களுக்கும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது. அவர் பிரிந்தாலும் அவரின் இசை இவ்வுலகம் உள்ளவரை ரசிகர்களால் ரீங்காரமிடும் என்று தெரிவித்துள்ளார்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close