Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வயதான போலீஸாக நடிக்கிறாரா விஜய்?.....விஜய் 59 அப்டேட்!

 அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடிக்க உள்ள படம் . இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் பூஜை போடப்பட்டு துவங்கப்பட்டது. விஜய் பெரும்பாலும் பெரிதாக தன் கெட்டப்பை மாற்ற மாட்டார் என பலரும் கூறியது நாமறிந்ததே. அந்த வகையில் அட்லீ படத்தில் இதுவரை விஜய்யை பார்த்திராத கெட்டப்பில் காட்டவிருக்கின்றார்களாம்.

’மங்காத்தா’ படத்தையடுத்து ‘சூது கவ்வும்’, ‘ஜிகர்தண்டா’ பாபி சிம்ஹா என பல இளம் நடிகர்கள் வயோதிக கெட்டப்பில் நடித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் கூட கொஞ்சம் வயதான கெட்டப்பில் அஜித் நடித்து வெளியாகி ஹிட்டான படமே.

அதே போல் இந்த படத்தில் விஜய்க்கு கொஞ்சம் வயதான கெட்டப், போலிஸ் கட்டிங் ஹேர் ஸ்டைல் என கலக்கவுள்ளாராம்.இந்த கெட்டப் கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு வித்யாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் குடும்ப பிணைப்பும் அதிகம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close