Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதி படத்தில் க்ளைமாக்ஸ் மாற்றமா?

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்திருக்கும் இடம்பொருள்ஏவல் படத்தை லிங்குசாமியின் திருப்பதிபிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அந்தப்படத்தை ஜூலை மாதம் வெளியிடவிருப்பதாகச் சொல்லியிருந்தார்கள். மாதத்தில் பாதிமுடிந்துவிட்ட பிறகும் படம் எப்போது என்கிற அறிவிப்பு வரவில்லை.

திருப்பதிபிரதர்ஸ் நிறுவனம் இன்னும் சிக்கல்களில் இருந்து மீளவில்லை என்பதால் இந்தப்பட வெளியீடு தள்ளிப்போகிறது என்று பரவலாகப் பேச்சு இருக்கிறது. இயக்குநர் சீனுராமசாமியும், படத்தை மொத்தமாக முடித்துக்கொடுத்தாகிவிட்டது, பெரியபடங்களுடன் வராமல் தனியாக வரவிரும்புகிறோம்  என்று போன வாரமே சொல்லியிருந்தார். படம் தயாரான பிறகும் எப்போது வெளியீடு என்று சொல்லாமலிருக்க என்ன காரணம்?

இந்தப்படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட முன்வந்தாராம் மதுரைஅன்பு. அதனால் அவருக்குப் படத்தைப் போட்டுக்காட்டியிருக்கிறார்கள். படத்தைப் பார்த்த அவர், படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது, க்ளைமாக்ஸில் இப்படி ஒரு மாற்றம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதினாராம். அதை லிங்குசாமி மற்றும் இயக்குநர் சீனுராமசாமி ஆகியோரிடம் சொன்னதாகத் தெரிகிறது.

அவருடைய கருத்தை இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அந்த மாற்றத்தைச் செய்துவிட்டுப் படத்தை வெளியிடலாம் என்று முடிவுசெய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பட வெளியீடு தள்ளிப்போகிறதென்று சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close