Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காக்காமுட்டை மணிகண்டன் இயக்கத்தில் விஜய்சேதுபதி

காக்காமுட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் அடுத்து விதார்த்தைக் கதாநாயகனாக வைத்து குற்றமும்தண்டனையும் என்கிற படத்தை எடுத்துமுடித்துவிட்டார். காக்காமுட்டை திரையரங்குகளுக்கு வருவதற்கு முன்பாகவே அந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாம்.

இப்போது அதற்குப் பிறகான வேலைகளில் இருக்கிறார்கள். காக்காமுட்டை படத்துக்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாகவே குற்றமும்தண்டனையும் படத்தை உடனடியாக வெளியிடத் தயங்குவதாகத் தெரிகிறது. ஏனெனில் மணிகண்டனின் அடுத்தபடம் என்பதால் காக்காமுட்டை மாதிரியே ஒரு படத்தை மக்கள் எதிர்பார்த்து வந்துவிட்டால் சிக்கலாகிவிடும் என்று அவர்கள் நினைப்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

குற்றமும்தண்டனையும் படம் காக்காமுட்டைக்கு முற்றிலும் நேரெதிராக இருக்கும் என்று சொல்கிறார்கள். அந்தப்படத்துக்கு அடுத்து அவர் இயக்கவிருக்கும் படத்தை கோபுரம்பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிப்பார் என்று சொல்லப்பட்டுள்ளது.அந்தப்படத்தில் யார் நடிக்கவிருப்பது என்பது பற்றி மணிகண்டன் இன்னமும் சொல்லவில்லை.

அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருப்பது விஜயசேதுபதி என்று சொல்லப்படுகிறது. மணிகண்டன் சொன்ன கதை விஜயசேதுபதிக்குப் பிடித்திருப்பதால் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். விஜயசேதுபதி இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் வேலைகள் முடிவடைந்தவுடன் புதியபடத்தின் வேலைகள் தொடங்கும் என்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்