Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விக்ரம் படத்தின் சிக்கல் தீர்ந்தும் படப்பிடிப்புக்குப் போகமுடியவில்லை, ஏன்?

அரிமாநம்பி படஇயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு கடந்த மாத இறுதியிலேயே தொடங்குவதாக இருந்தது. அதற்காக மலேசியா புறப்பட்ட நேரத்தில் தாணு கொடுத்த புகார் காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

அதன்பின்னர், பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்தச்சிக்கல் தீர்க்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. தாணு வைத்த, இதுவரை இந்தப்படத்துக்காக செலவு செய்த தொகை மற்றும் இயக்குநர் தரவேண்டிய தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றில், சிலவற்றை தயாரிப்பாளர் கருணாமூர்த்தி ஏற்றுக்கொண்டதால் சுமுகநிலை ஏற்பட்டுவிட்டது என்று சொல்கிறார்கள்.

அப்புறமென்ன? உடனே படப்பிடிப்புக்குக் கிளம்பவேண்டியதுதானே என்றால் அதிலும் சிக்கல் என்கிறார்கள். படத்தின் நாயகி காஜல் உட்பட பலரிடமும் இந்தப்படத்துக்காக வாங்கிய தேதிகளைப் பயன்படுத்த முடியாமல் போய்விட்டது. இப்போது போய் தேதிகள் கேட்டால் உடனே இல்லை என்று சொல்கிறார்களாம்.

ஏதோ ஒரிருவர் என்றால் கூட அவர்களை விட்டுவிட்டு படப்பிடிப்புக்குப் போகலாம் படத்தில் இருக்கும் பெரும்பாலானவர்கள் நிலை இதுதான் என்பதால் உடனே படப்பிடிப்புக்குப் போகமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். அதனால் இந்தமாத இறுதி அல்லது ஆகஸ்ட் முதல்வாரத்தில்தான் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close