Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நான் என்றும் தவறான வழியில் போய்விடமாட்டேன் - விஷால் உறுதி!

விஷால், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் படம் பாயும்புலி. பாண்டிய நாடு படத்திற்குப் பிறகு மீண்டும் விஷாலும் சுசீந்திரனும் இணைந்திருக்கும் இப்படத்திற்கான சிலுக்கு மரமே பாடல் சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியிடப்பட்டது. லிங்குசாமி வெளியிட பாண்டியராஜ் பெற்றுக்கொண்டார்.

விழாவில் விஷால்பேசும் போது '' ஆகஸ்ட் 2ல் இசைவெளியீடும், தொடர்ந்து செப்டம்பர் 4ல் படத்தையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இது என் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று  நினைக்கிறேன். இது நான் நடித்த போலீஸ் சம்பந்தப்பட்ட 3வது கதை. எப்போதும் என்னை இயக்கும் இயக்குநர் அந்தப் படத்தை அவரது  சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அவரிடம் சிறந்தது எல்லாம் எனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக க்ளைமாக்ஸ் சிறப்பாகவரவேண்டும் என்று நினைப்பேன் அதுதான் பார்ப்பவர் மனதில் தங்குவது .

 வேந்தர் மூவிஸில் நடிக்க எனக்கு ஆரம்பத்தில் பயம். இருந்தது. தயக்கம் இருந்தது, சந்தேகம் இருந்தது. அந்த பயத்தோடுதான் படத்தை தொடங்கினோம். போகப் போக புரிதல் ஏற்பட்டது. நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. இனிமேல் இவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்யலாம் என நம்பிக்கை வந்திருக்கிறது. வெளிப் படங்களில் நடிக்கலாம் என்கிற நம்பிக்கையும் வந்திருக்கிறது. 

இது காஜலுடன் எனக்கு முதல்படம். சூரியும் நன்கு பழகினார். எங்கள் வீட்டிலிருந்து ஒரே கேரியரில் அவருக்கும் சாப்பாடு அனுப்பும் அளவுக்கு சூரி பழகினார். நானும் திருவும் மீண்டும் இணைய இருக்கிறோம். மனசுலபட்டதை செய்கிறேன் நான் என்றும் தவறான வழியில் போய்விட மாட்டேன். 

'பாயும்புலி' பற்றிப் பல விதமாகக் கேட்கிறார்கள். அந்த தலைப்பை கேட்ட போது ஏவிஎம் பாலசுப்ரமணியம் அவர்கள் மறுப்பு கூறாமல் உடனே கொடுத்தார். இந்தப் பாயும்புலி தலைப்பு படத்துக்கு பெரியபலம். சக்தியும் ஊக்கமும் தரும் தலைப்பு இது. இது எதை நோக்கிப் பாயுது என்பது படத்தின் க்ளைமாக்ஸில் புரியும்.

இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல.உண்மைச் சம்பவத்தின் சாயல் தெரியலாம் இதே சாயலில் மதுரையில் நடந்துள்ளது. செப்டம்பரில் பாயும்புலி தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. வெளிநாடு போகத் திட்டமிட்டோம் இங்கேயே முடித்து விட்டோம் ஆனால் செலவு அதிகமாகி விட்டது. என்று பேசிமுடித்தார் விஷால்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close