Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநர் ராம் நாயகன், இயக்குநர் மிஷ்கின் வில்லன், தொடங்கும்போதே பரபரப்பை ஏற்படுத்தும் சவரக்கத்தி

இயக்குநர் ராம் மற்றும் மிஷ்கின் கலவையில் உருவாகிவரும் படத்தின் பெயர் சவரக்கத்தி. மிஷ்கினின் உதவி இயக்குநரான ஆதித்யா இயக்கும் இப்படத்திற்கு மிஷ்கின் கதாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று  மூன்று பொறுப்புகளை ஏற்றுள்ளார்.

இயக்குநர் ராம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிஷ்கின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பூர்ணா நாயகியாக நடிக்கிறார். மிஷ்கின் தன் உதவியாளருக்காகவே இக்கதையை எழுதி இயக்கவைத்திருக்கிறார். மேலும் இப்படத்தை மிஷ்கினின் லோன் உல்ஃப் ப்ரோடெக்‌ஷன் நிறுவனமே தயாரிக்கிறது.

இப்படத்தை பற்றி மிஷ்கின் கூறியதாவது “நம் ஒவ்வொருவருக்குள்ளும் மறைந்திருக்கும் குழந்தையை மீண்டும் பெற்றெடுப்போம், அதற்கான கதைத்தளமே சவரக்கத்தி” என்றார்.  PC ஸ்ரீராமின் உதவியாளரான கார்த்திக் ஒளிப்பதிவில், பிசாசு இசையமைப்பாளர் அரோ குரோலியின் இசையில் படம் உருவாகிவருகிறது. 

ராம் மற்றும் மிஷ்கின் ஆகிய இருவருமே தங்களுக்கென்று தனித்தன்மை கொண்டவர்கள், இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கும் செய்தியால் இந்தப்படம் திரையுலகினரால் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close