Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வாலு படத்துக்காக தற்கொலை முயற்சியா...என்ன நடக்கிறது தமிழகத்தில்!

 விஜய் சந்தர் இயக்கத்தில் சிம்பு, ஹன்சிகா நடித்த வாலு படம் இந்த முறையும் அறிவித்த தேதியில் வெளியாகவில்லை. கோர்டில் வாலு படத்திற்கு தடை கோரி வழக்கு தொடரவே இந்த முறை படத்திற்கு தடை விழுந்துள்ளது. இந்நிலையில் சிம்புவுக்கு பலரும் ஆறுதல் சொல்லி வருகிறார்கள்.

தற்போது புதிய செய்தியாக இரண்டு ரசிகர்கள் சிம்புவின் ‘வாலு’ படம் ரிலீஸ் ஆகாத காரணத்தால் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக சமூக வலைகளில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும் இதற்கு சிம்புவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படிச் செய்யாதீர்கள்.

ஏற்கனவே நான் மனதளவில் உடைந்து போயிருக்கிறேன். எனக்கு பக்க பலமாக இருக்கும் நீங்களும் இப்படி செய்து மேலும் என்னைக் காயப்படுத்தாதீர்கள் எனக் கூறியிருந்தார். இது உண்மையோ பொய்யோ எனினும் ஒரு படம் வெளியாகாமல் போனதால் தற்கொலை எனச் செய்தி பரவுவதே இளைஞர்கள் எவ்வளவு பலவீனமாக இருக்கிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது.

நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கையில் ஒரு படத்திற்கு அந்த நடிகரின் ரசிர்கர்களாக ஆதரவு தெரிவிக்கலாம் ஆனால் இது கொஞ்சம் இளைஞர்களின் சக்தியை திசை திருப்பும் செயலாகத்தான் இருக்கிறது. 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close