Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செப்டம்பரில் சண்டக்கோழி 2 தொடங்குகிறது

விஷால் இப்போது சுசீந்திரன் இயக்கத்தில் பாயும்புலி படத்தை முடித்துவிட்டார், அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படத்தைத் தொடர்ந்து அவர் லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி பாகம் இரண்டில் நடிக்கவிருக்கிறார்.

அந்தப்படத்தின் படப்பிடிப்பு பாயும்புலி பட வெளியீட்டுக்குப் பிறகு தொடங்கவிருக்கிறதாம். பாயும்புலி படத்தை செப்டம்பர் நான்காம்தேதி வெளியிடவிருக்கிறார்கள். செப்டம்பர் ஒன்பதாம்தேதி சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாக இயக்குநர் லிங்குசாமியே தெரிவித்திருக்கிறார். ஆக, செப்டம்பரில் விஷாலுக்கு இரட்டை சந்தோசம் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படம் வெளியானது. செப்டம்பரில் பாயும்புலி வெளியாகவிருக்கிறது.

அடுத்து லிங்குசாமி படம் அதற்கடுத்து திரு இயக்கத்தில் ஒருபடம் என்று வரிசையாகப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் விஷால். 
 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close