Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பாடக்கர் படத்தின் பெயர் மாறியது எதனால்?

சுராஜ் இயக்கத்தில் ஜெய்மரவி த்ரிஷா நடிப்பில் தயாரான அப்பாடக்கர் படத்தின் பெயரை, படம் வெளியாகிற நேரத்தில் சகலகலாவல்லவன் என்று மாற்றிவைத்திருக்கிறார்கள்.

இவ்வளவுநாட்கள் அப்பாடக்கர் என்று வைத்திருந்துவிட்டுக் கடைசிநேரத்தில் இப்படி மாற்றியதற்கு என்ன காரணம்? வழக்கம்போல வரிவிலக்குதான் காரணம் என்று சொல்லப்படுகிறது. திரைப்படங்களுக்கு தமிழகஅரசு கொடுக்கும் வரிவிலக்கைப் பெற முக்கியமான தகுதியே படத்துக்குத் தமிழில் பெயர் இருக்கவேண்டும் என்பதுதான். இது பல வருடங்களுக்கு முன்பே சொல்லப்பட்ட விசயம்.

அப்பாடக்கர் என்று பெயர் வைத்துப் படத்தைத் தொடங்கும்போதும், தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்கிற விதி இருந்தது. இந்தப்பெயரை வைக்கும் போது இவர்களுக்கு இது தெரியாமல் போனதா? அல்லது தெரிந்தாலும் இந்தப்பெயருக்கே வரிவிலக்கு வாங்கிவிடலாம் என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை.

படப்பிடிப்பு மற்றும் அதற்குப்பிறகான வேலைகள் முடிவடைந்து வரிவிலக்குக்கு விண்ணப்பிக்கிற நேரத்தில்தான் இது தமிழ்ப்பெயர் இல்லை என்கிற உண்மை இவர்களுக்கு உறைக்கிறதா? என்கிற கேள்வி எழுகிறது. அண்மையில் சூர்யாவின் மாஸ் படத்துக்கு இப்படி நடந்தது. இப்போது ஜெயம்ரவியின் படத்துக்கு நடந்திருக்கிறது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்