Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தயாரிப்பாளராகிறார் அமலாபால்!

இந்தி, மலையாளம் தமிழ் என்று அனைத்து மொழிகளிலும் தன் படங்களின் மூலம் தடம் பதித்தவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவர் தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்குநர் விஜய்யின் திங்க் பிக் ஸ்டூடியோஸ் நிறுவனத்திற்காக இயக்கவிருக்கிறார்.

'சைவம்' மற்றும் வெளிவர தயாராகி வரும் ’நைட் ஷோ’ திரைப்படங்களை தொடர்ந்து திங்க் பிக் ஸ்டூடியோஸ் சார்பில் பெயர் சூட்டப்படாத இப்படத்தை AL அழகப்பன் மற்றும் அமலா பால் விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கான பூஜை சென்னையில் நடந்துமுடிந்தது.

பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடிக்கும் இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருக்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு செய்ய சாபு சிரில் டிசைனராக பணியாற்றவுள்ளார். சர்வதேச ரசிகர்களுக்காக இப்படம் உருவாகவிருக்கிறதாம்.

அமலா பால் விஜய் இத்தயாரிப்பைப் பற்றி கூறுகையில் “ நான் தயாரிக்கும் முதல் படமே சர்வதேச ரசிகர்களுக்கான படமாய் தயாரகவுள்ளது. ப்ரியதர்ஷன் சார், சந்தோஷ் சிவன் சார், பிரகாஷ் ராஜ் சார், ஸ்ரேயா ரெட்டி என தரமான கலைஞர்கள் இருப்பது இப்படத்திற்கு பெரிய பலம். ஆகஸ்ட் மாதம் மத்தியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். எங்கள் திங்க் பிக் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனதிற்கு இப்படம் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத்தரும்.” என்று கூறி அறிமுக தயாரிப்பாளராகியிருக்கிறார் அமலாபால்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close