Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மிஷ்கின் பட தொடக்க விழாவுக்கு இடம் கொடுத்த நடிகர்

இயக்குநர் மிஷ்கினின் லோன்உல்ப் நிறுவனம் தயாரிப்பில் அவரிடம் உதவியாளராக இருந்த ஆதித்யன் இயக்கத்தில் தொடங்கப்பட்டிருக்கும் படம் சவரக்கத்தி. இந்தப்படத்தில் கதாநாயகனாக இயக்குநர் ராமும் நாயகியாக பூர்ணாவும் நடிக்கிறார்கள். படத்தைத் தயாரிப்பதோடு படத்தின் கதையை எழுதி வில்லனாகவும் நடிக்கவிருக்கிறார் மிஷ்கின்.

இந்தப்படத்தின் தொடக்கவிழா நடிகர் செல்வாவின் வீட்டில் நடந்திருக்கிறது. மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் முக்கியவேடத்தில் நடித்திருந்தார் செல்வா. அதற்காக மிஷ்கின் தயாரிக்கும் படத்தின் தொடக்கவிழாவைத் தன் வீட்டில் நடத்தியிருக்கிறார்.  பொது இடத்தில் நிகழ்ச்சியை நடத்தாமல் வீட்டிலேயே நடத்த என்ன காரணம்?

அதே நாள்  மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி அஞ்சலி நடந்தது. அதையொட்டி தமிழகம் முழுவதும் படப்பிடிப்புகள் அன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் முன்னரே நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்திருந்த மிஷ்கின்,  பொது இடங்களில் வைக்க வேண்டாம் என்றும் அதனால் தான் செல்வா வீட்டிலேயே நிகழ்ச்சியை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

முகமூடி படத்தில் நடிக்க வைத்து, செல்வா நன்கு பேசப்பட்டதால் அதற்கு காரணமான  மிஷ்கினுக்கு நன்றிக்கடன் செய்யும் விதமாக தன் வீட்டிலேயே தொடக்க விழாவை நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close