Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பேய்க்கதையில் நடிக்கிறார் சந்தானம்

சந்தானம் கதாநாயகனாக நடித்த இனிமேஇப்படித்தான் படம் வெளியாகி ஓரளவு வரவேற்பையும் பெற்றது. அதைத் தொடர்ந்து அவர், ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடிக்கும் வாசுவும்சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் வேலைகளில் இருந்தார் என்று சொல்லப்பட்டது.

அதற்கடுத்து அவர் நடிக்கும் படம் பற்றி எந்தத்தகவலும் இல்லை. யாரும் அவரைத் தேடி வராவிட்டாலும் அவரே தயாரிக்குமளவுக்குத் தெம்பாக இருந்தும் அடுத்தபடம் பற்றி அறிவிப்பு எதுவும் இல்லை. அவரை வைத்துப் படமெடுக்க யாரும் தயாராக இல்லையா? என்று கேட்டால், இனிமேஇப்படித்தான் படத்துக்குப் பிறகு அவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தை எடுக்கவும் சிலர் தயாராக இருந்தனராம். நல்லகதைக்காக அவர் காத்திருந்தாராம்.

இப்போது அடுத்தபடத்தைப் பற்றி முடிவு செய்துவிட்டாராம். லொள்ளுசபா புகழ் ராம்பாலா இயக்கவிருக்கும் படத்தில் அவர் நடிக்கிறார், அந்தப்படத்தை தேனான்டாள்பிலிம்ஸ் தயாரிக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இன்றைக்குப் பெரிய தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் அவர்கள் தயாரித்தால் படவெளியீடு சிறப்பாக இருக்கும் என்பதால் அவர்கள் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அந்தப்படத்தின் கதை பேயக்கதை என்பதுதான் விசேஷமான தகவல் என்று சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close