Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அல்லி மலரும் அதிகாலை!

’’பொதுவாக அல்லி என்கிற உவமை பெண்களைக் குறிப்பதாக இருக்கும்.இங்கே ஒரு ஆணை அல்லியாக சித்தரித்து எடுக்கப்பட்ட குறும்படம் தான் ’அல்லி மலரும் அதிகாலை’’.தெளிவாகப் பேசுகிறார் குறும்பட இயக்குநர் மோனிஷ். அதிகாலை நேரம் பனியும் மிதமான இருட்டுமாய் படர்ந்து கிடக்க அந்த நேரத்தில் பேப்பர் போடும் பையன் ஒருவனும் ஃப்ரஷாக மலர்ந்திருக்கிறான்.காலை நேரத்தில் அவன் கண்ணில் ஒரு தேவதை தெரிகிறாள்.அவனுக்கு அவள் அப்படிதான்.அந்த பெண்ணை தினம் தினம் பார்ப்பது போதும்.

அந்த நாள் இனிய நாள் என்கிற கோணத்தில் நாட்களை கடத்துகிறான்.முடிவில் அவள் அந்த ஏரியாவை விட்டு காலி செய்ய, இறுதியாக அவன் அந்த பெண்ணின் விலாசத்தை கண்டுபிடித்தானா அவளிடம் போய் இவன் என்ன சொல்லப் போகிறான் என்பது தான் மிச்சமுள்ள கதை.மோனிஷ் பேசும் போது, ‘’விஜய் ஆதிராஜ் சார்கிட்ட உதவி இயக்குநரா இருந்திருக்கேன்.இப்ப நான் விளம்பரங்கள் எடுத்துட்டு இருக்கேன்.கூடவே என்னோட படத்துக்கும் கதை எழுதிட்டு இருக்கேன்.

இதான் என்னைப் பத்தின ஒரு மினி அறிமுகம். போன வருஷம் கோவாவுல நடந்த திரைப்பட விழாவில் எனக்கு சிறந்த குறும்பட இயக்குநர் விருது கிடச்சது.பாங்காக்ல நடந்த உலக சினிமா திரையிடல் விழாவிலும் இந்த குறும்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டுச்சு.பொதுவா ஒரு பையனுக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருந்து ஃபாலோ பண்ணா அது காதலா தான் இருந்திருக்கணும்னு அர்த்தம் இல்ல.அவனுக்கு இவளை பாக்குறது மட்டுமே போதுமா இருந்துச்சு.இவன் அல்லி.

அந்த பொண்ணு சூரியன்.இவளைப் பாக்கும் போது மலர்வான்.நெருங்க நினைச்சு தேவையில்லாம பொசுங்கிப் போறத விட இந்த ஃபீல் ரொம்பவே நல்லா இருக்கும்.இந்த அழகான உணர்வை எல்லா ஆண்களும் கடந்து வந்திருப்போம்.படம் பாக்குற உங்க கையில முடிவை கொடுத்துப் புரிய வைக்கிற படம் தான் இது.’’என்கிறார் மோனிஷ். சரிதான்!

குறும்படத்தைக் காண: 

 

 

- பொன்.விமலா -

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close