Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் பொய் சொன்னாரா?

 ' மாரி' படவெளியீட்டுக்கு முன்பாக நிறையச் சிக்கல்களைச் சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தப்படத்தைத் தயாரித்த நிறுவனம் ஏற்கெனவே தயாரித்த படங்களின் வரவுசெலவுக்கணக்கு இந்தப்படத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. படவியாபாரத்தின் போதே இந்தச்சிக்கல் வந்திருக்கிறது. அப்போது தயாரிப்பாளர்கள் தரப்பில், வியாபாரத்தை முழுமையாக முடித்துவிட்டுப் படத்தை வெளியிடலாம் என்று சொல்லப்பட்டதாம். ஆனால் தனுஷோ, இந்தத்தேதியில்தான் படம் வெளியாகவேண்டும் என்று பிடிவாதம் காட்டினாராம்.

அதனால் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கிக்கொண்டு அதற்காக பெரும்தொகையை தனுஷ் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. தயாரிப்பாளர்கள் தரப்பு மற்றும் தனுஷ் தரப்பு உள்ளிட்ட எல்லோருமே இதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மாரி படவெளியீட்டுக்கு முந்தையநாள் நடந்த பத்திரிகையாளர்சந்திப்பில் இதுபற்றி தனுஷிடம் கேட்டபோது, என்னிடம் சேட்டிலைட்டே கிடையாதே அப்புறம் எதற்கு நான் சேட்டிலைட் ரைட்ஸை வாங்கவேண்டும் என்று திருப்பிக்கேட்டார். வாங்கினீர்களா? என்று கேட்கும்போது, இல்லை என்கிற ஒற்றைவரி பதிலே போதும்.

அதை விட்டுவிட்டு அவர் இப்படிக் கேட்டது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. சேட்டிலைட்ரைட்ஸ் வாங்குகிற எல்லோருக்கும் சேட்டிலைட் இருக்கவேண்டுமா? பல நிறுவனங்கள் அதற்கான உரிமையை ஒருவரிடம் கொடுத்துவிட்டுக் கடன்வாங்குவது தனுஷூக்குத் தெரியுமே? தெரிந்தே அவர் ஏன் இப்படிச் சொன்னார்? என்று கேள்விகள் வருகின்றன. இப்போதும் அவருடைய நிறுவனத்தின் பெயரில்தான் சேட்டிலைட்ரைட்ஸ் இருக்கிறதென்று சொல்லப்படுகிறது. அப்படியிருந்தால் தனுஷ் ஏன் பொய்சொல்லவேண்டும் என்று எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close