Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஷங்கர் தவறவிட்ட இடத்தைப் பிடித்தார் ராஜமௌலி!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த படம் ‘பாகுபலி’. படத்திற்கு இசை கீரவாணி.  படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது எனினும் படம் குறித்த பேச்சும், பாராட்டுகளும் மட்டும் இன்னமும் ஓயவில்லை.

இதுவரை ரூபாய் 300 கோடிகளை சர்வசாதரணமாக வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் புது சாதனை படைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்த வாரங்களில் வெளியான படங்கள் கூட ‘பாகுபலி’யின் வசூலை அசைக்க முடியவில்லை. 

இப்போது பாலிவுட்டின் டாப் நடிகர் சல்மான் கான் படமானா ‘பஜ்ராங்கி பாய்ஜான்’ இந்தியில் வெளியாகியுள்ளது. இந்த நிலையிலும் கூட பாகுபலி தனக்கான வசூலை கம்பீரமாக வசூலித்துவருகிறது. மேலும் தென்னிந்திய படங்களிலேயே முதல் முறையாக ‘பாகுபலி’ 300 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது. இதற்கு முன்பு ஷங்கரின் ‘எந்திரன்’ படம் 290 கோடி பெற்று 10 கோடியில் இந்த வாய்ப்பை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டின் படங்கள் இலகுவாக இதில் நுழையக் காரணம் இந்தி பேசும் மக்கள் வட இந்தியாவில் அதிகம் ,மேலும் தென்னிந்தியாவிலும் இந்தி படம் பார்க்கும் பழக்கம் கொஞ்சம் அதிகம் என்றே கூற வேண்டும். எனவே பாலிவுட்டின் படங்களுக்கு ஒரு படத்தை வியாபாரம் செய்வது மிக எளிது.

அந்த வகையில் சின்ன வியாபாரமாக நடத்தும் தென்னிந்திய படங்களை பொருத்தமட்டில் 300 கோடி க்ளப் என்பது கனவாக இதுநாள் வரை இருந்து வந்தது. இப்போது அது நிறைவேறிவிட்டது என்றேக் கூற வேண்டும்.  

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

[X] Close