Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

படப்பிடிப்பை வேகமாக முடிக்க கமல் போட்ட புதியதிட்டம்

ராஜேஷ்எம்செல்வா என்பவரது இயக்கத்தில், கமல் த்ரிஷா நடிக்கும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லியிலுள்ள ஒரு தனியார்திரைப்பட நகரில் நடந்துகொண்டிருக்கிறது.

அடுத்தமாதம் நான்காம்தேதிவரை அந்தப்படத்தின் படப்பிடிப்பு அங்கேயே நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் மொத்தப்படத்தையும் எடுத்துவிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன்பின் படத்தைத் தொகுத்துப்பார்த்துவிட்டுத் தேவைப்படுகிற காட்சிகளைப் படமாக்கினால் போதும் என்று சொல்லப்படுகிறது.

பூந்தமல்லியில் படப்பிடிப்பு என்றால் படத்தல் நடிக்கும் நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் எல்லாம் வீட்டிலிருந்து சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்வது வழக்கம். ஆனால் இந்தப்படத்தில் மாற்றம் நடந்திருக்கிறதாம்.

தினமும் படப்பிடிப்பு முடித்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டு மறுபடி காலையில் கிளம்பி வருவதால் நேரம் மட்டுமின்றி அலைச்சலும் அதிகம் என்பதால் எல்லோருக்கும் படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்குப் பக்கத்திலேயே தங்கும்வசதி செய்து கொடுத்துவிட்டார்களாம். இயக்குநர், உதவிஇயக்குநர்கள் உட்பட படத்தில் பணியாற்றும் எல்லோரும் அங்கு தங்குகிறார்கள் என்பது கூடப் பெரியவிசயமில்லை.

கமலும், வீட்டுக்கு வந்து போவதால் நிறைய நேரம் வீணாகிறது என்று சொல்லி அங்கேயே தங்கிக்கொள்கிறாராம். அவரே தங்குகிறார் என்பதை எல்லோரும் ஆச்சரியமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். விரைந்து படப்பிடிப்பை முடிக்கவேண்டும் என்பதற்காக கமல் செய்திருக்கும் இந்தப்புதிய திட்டம் படப்பிடிப்பு வேகமாக நடக்க உதவுகிறது என்று படப்பிடிப்புக்குழுவினர் சொல்கிறார்களாம்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close