Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அப்புக்குட்டியைத் தொடர்ந்து பெயரை மாற்றிக் கொண்ட இயக்குநர் வாசு மகன் !

தொட்டால் பூ மலரும், மகேஷ் சரண்யா மற்றும் பலர், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சக்தி. இவர் இயக்குநர் பி.வாசுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  தொடர்ந்து கோ, யுவன் யுவதி உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

அவர் மீண்டும் ஹீரோவாக நடித்து வெளியாகவிருக்கும் படம் தற்காப்பு. கிருஷ்ணகிரி மற்றும் கர்நாடகாவில் படப்பிடிப்புகள் நடந்துவருகிறது. தவறுதலாக நடைபெறும் ஒரு கொலையால் ஏற்படும் பிரச்சனைகளை மிக எதார்த்தமாக சொல்லும் திரைக்கதையே தற்காப்பு.

தமிழ்நாட்டில் கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வரும் பல உண்மை சம்பவங்களை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தற்காப்பு என்பது தன்னை மட்டும் காத்துக்கொள்ளுவதைப் பற்றி பேசாமல் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதை கொஞ்சம் அழுத்தமாகவே பேசும் என்கிறார் படத்தின் இயக்குநர். 

இந்தப்படத்திலிருந்து சக்தி தன்னுடைய பெயரை சக்திவேல் வாசு என்று மாற்றிக் கொண்டார். முன்னரே நந்திதா ஸ்வேதா, ராய் லட்சுமி , சிவபாலன் அப்புகுட்டி என்று தங்களுடைய பெயர்களை மாற்றிய பிரபலங்களின் வரிசையில் இவரும் சேர்ந்துகொண்டார். 

பொதுவாக அதிர்ஷ்டத்திற்காவே தங்களுடைய பெயர்களை மாற்றுவது வழக்கம். நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவாக களம் இறங்கும் சக்திவேல் வாசுவிற்கு அவரின் பெயர் கைகொடுக்குமா என்று பொறுந்திருந்து தான் பார்க்க வேண்டும்

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close