Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜூலை 31 ஆம் தேதி வாலு ரிலீஸ்?

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஜூலை பதினேழாம்தேதி சிம்பு நடித்த வாலு வெளியாகும் என்று சொல்லப்பட்டது. கடைசிநேரத்தில் அந்தப்படத்துக்கு எதிராகப் பலர் நீதிமன்றத்துக்குப் போனதன் விளைவு படவெளியீடு தள்ளிப்போளது.

அதோடு இனிமேல் அந்தப்படம் வெளியாவதே கஷ்டம், ஏனெனில் அந்தப்படத்தைத் தயாரித்த நிக்ஆர்ட்ஸ்சக்ரவர்த்தி, நிறையக் கடன் வாங்கி வைத்திருக்கிறார், வாலு படம் சம்பந்தப்பட்ட கடன்களை சிம்பு தரப்பு ஏற்றுக்கொண்டாலும், பழையபடங்களுக்காக அவர் செட்டில் செய்யவேண்டிய தொகையை யார் தருவார்? அவற்றையெல்லாம் தருகிறவரைக்கும் அந்தப்படம் வெளியாகாது என்று திரையுலகில் பேச்சு இருக்கிறது.



அவற்றைப் பொய்யாக்கி, வாலு படத்தின் சிக்கல்களைத் தீர்த்து இம்மாதமே அந்தப்படத்தை வெளியிடவிருக்கிறார்களாம். இம்மாதம் 31 ஆம் தேதி அந்தப்படத்தை வெளியிடத் திட்டமிட்டு வேகமாக வேலைகள் செய்துகொண்டிருக்கிறார்களாம்.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் சக்ரவர்த்தியிடம் கேட்டபோது, இம்மாதம் 31 ஆம் தேதி கண்டிப்பாகப் படம் வெளியாகிவிடும் என்றார். இதுகுறித்து டி.ராஜேந்தரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவு விரைவில் வந்துவிடும் அது வந்ததும் ரிலீஸ் தேதி சொல்வோம் என்றார். விரைவில் உத்தரவு வரும் என்று நம்பியே 31 ல் ரிலீஸ் செய்யும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்களாம்.இம்முறையாவது சொன்னபடி வந்துவிட்டால் நல்லது.    

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close