Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருள்நிதியின் நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்துக்குக் கடைசி நேரத்தில் வந்த சிக்கல்

அருள்நிதி, ரம்யா நெம்பீசன் நடிப்பில் இந்த வாரம் வெளியாகக் காத்திருக்கும் படம் “ நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்”. இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று எம்.எஸ்.கே. பிலிம் நிறுவனர் நாகராஜ் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது, “லியோ விஷன் நிறுவனத்தின் உரிமையாளரான ராஜ்குமார் தயாரிக்கும் இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை என்னுடைய நிறுவனமான எம்.எஸ்.கே.பிலிம் கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 9ம் ஒப்பந்தம் செய்தனர். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டு வினியோக உரிமைக்காக 21 லட்சம் நான் கொடுக்க வேண்டும்.

அதன் படி, 7 லட்சம் ரூபாயை முன் தொகையாக ஏற்கெனவே கொடுத்துவிட்டேன். மீதி தொகையை படம் வெளியாவதற்கு 3 நாட்கள் முன்னர் வழங்க வேண்டும். இந்த நிலையில் படத்தின் தயாரிப்புகள் முடிந்து வெளியாகவிருப்பதாக தயாரிப்பாளர் விளம்பரம் செய்துள்ளார்.

இதையடுத்து பலமுறை அந்த தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முயற்சித்தும், அவர் பேசவில்லை. என்னிடம் முன்பணத்தைப் பெற்றுக்கொண்டு, அந்தப் படத்தின் வெளிநாட்டு உரிமையை வழங்காமல் உள்ளனர். எனவே, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த மனுக்கான வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பை வரும் வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார். பாகுபலி படத்தின் வெற்றியால் இந்த வாரமும் எந்த பெரிய பட்ஜெட் படங்களும் வெளிவராத நிலையே நிலவுகிறது. அதனால் இப்படம் இவ்வாரம் வெளியாகும் என்றால் எந்த போட்டியுமின்றி வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close