Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனுஷ் படத்திலிருந்து வெளியேறினாரா வேல்ராஜ்?

தனுஷின் வெற்றிப்படமான வேலையில்லாப்பட்டதாரி படத்தின் இரண்டாம்பாகத்தையும் ஒளிப்பதிவாளர் வேல்ராஜே இயக்குவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் முதல்பாகத்தையே வேல்ராஜ் பெயரைப் போட்டு தனுஷே இயக்கினார் என்றும் ஒரு வதந்தி உள்ளது.

இரண்டாம்பாகத்தின் படப்பிடிப்பிலும் அதுபோலவே நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. முதல்பாகத்துக்கு ஒளிப்பதிவு முழுக்க அவர்தான் செய்தார் என்றும் இப்போது அதுவும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இரண்டாம்பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக வேல்ராஜ் படப்பிடிப்புக்குப் போகவில்லையென்று சொல்லப்படுகிறது.

ஆனாலும் படப்பிடிப்பு வழக்கம்போல நடந்துகொண்டிருந்ததாம். வேல்ராஜிடம் உதவியாளராகப் பணியாற்றிய குமார் என்பவர்தான் இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

இதுபற்றி ஒளிப்பதிவாளர் வேல்ராஜிடம் கேட்டபோது, அந்தப்படத்தை நான்தான் இயக்குகிறேன், ஒளிப்பதிவை என்னிடம் வேலை பார்த்த குமார் செய்கிறார், நான் அந்தப்படத்தின் படப்பிடிப்புக்குப் போகாமல் விட்டுவிட்டதாகச் செய்திகள் வந்தது எனக்கும் தெரியும், சில மாண்டேஜ்ஷாட்ஸ் எடுக்கும்போது நான் போகவில்லை என்பதை வைத்து மொத்தப்படப்பிடிப்புக்குமே நான் போகவில்லை என்று சொல்லத்தொடங்கிவிட்டார்கள்.

அது முற்றிலும் தவறான செய்தி என்பதால் இதுவரை அதுபற்றி நான் விளக்கம் கொடுக்கவிரும்பவில்லை என்கிறார் வேல்ராஜ்.    

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close