Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்தின் நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராகிம்ராவுத்தர் காலமானார்

விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான இப்ராகிம்ராவுத்தர் காலமானார். கடந்த சில வாரங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்றுகாலை சிகிச்சை பலனளிக்காமல் மரணித்துவிட்டார்.

விஜயகாந்தின் வளர்ச்சிக்கு முக்கியக்காரணமாக இருந்தவர் என்று இவரைச் சொல்வார்கள். அவரை வைத்து நிறையப்படங்களைத் தயாரித்தவர். தாயரிப்பாளர்கள்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தற்காலத்தில் அவர் அதிமுகவில் சேர்ந்து பேச்சாளராகவும் இருந்தார், இவர் திருமணமே செய்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இப்ராஹிம் ராவுத்தர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கோமா நிலையில் இருந்த அவரை நண்பர் விஜயகாந்த் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். "நண்பா நீ எழுந்து வருவாய்" என்று உருக்கமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ராவுத்தர் இன்று காலை காலமானார்.  சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அவருடைய இறுதி நிகழ்வுகள் நடக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இப்ராஹிம் ராவுத்தர் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close