Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அருள்நிதி படத்தின் வெளிநாட்டுஉரிமை கொடுக்காதது ஏன்? தயாரிப்பாளர் விளக்கம்

ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி நடித்த நாலுபோலிஸூம்நல்லாஇருந்தஊரும் படம் ஜூலை 24 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து எம்எஸ்கேபிலிம் என்கிற திரைப்படநிறுவனம், இந்தப்படத்தின் வெளிநாட்டுஉரிமையை எங்களுக்குக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு அதற்காக ஏழுஇலட்சம் முன்பணமும் வாங்கிக்கொண்டு வெளிநாட்டுஉரிமையைத் தரவில்லை எனவே நீதிமன்றம் இந்தப்படத்துக்கு இடைக்காலதடைவிதிக்கவேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்.

இதன்விசாரணை வரும் வியாழக்கிழமை நடக்கும் என்று தெரிகிறது. இதுசம்பந்தமாக இப்படத்தை வெளியிடும் ஜே.எஸ்.சதிஷ்குமாரிடம் இதுபற்றிக் கேட்டபோது, இந்தப்படத்தின் வெளிநாட்டுஉரிமையை அவருக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்தோம். அதன்பின்னர், வெளிநாட்டுஉரிமை கொடுப்பதால் படம் வெளியான அன்றே திருட்டுவிசிடி வந்துவிடுகிறது என்பதால் வெளிநாட்டுஉரிமை கொடுக்கவேண்டாம் என்று முடிவுசெய்தோம்.

அதை அவரிடமும் தெரிவித்துவிட்டு, நீங்கள் கொடுத்த முன்பணத்தைத் திரும்பப்பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டோம். அப்படிச் சொல்லிவிட்டு நாங்கள் வேறு ஒருவருக்கு அந்த உரிமையைக் கொடுத்திருந்தால்தான் தவறு. நாங்கள் யாருக்கும் கொடுக்கவேண்டாம் என்றே முடிவு செய்திருக்கிறோம், இந்த விவரத்தை அவரிடமும் சொல்லிவிட்டோம். அதன்பின்னரும் அவர் நீதிமன்றத்துக்கு எதற்காகச் சென்றார் என்று தெரியவில்லை என்கிறார் ஜே.எஸ்.சதிஷ்குமார்.

வெளிநாட்டுஉரிமையைக் கொடுப்பதன் மூலம் ஒரு வருமாளம் இருக்கும்போது அதை வேண்டாமென்று சொல்வது ஏன்? என்று கேட்டால், சில கோடிகள் செலவு செய்து இந்தப்படத்தை எடுத்திருக்கிறோம், மேலும் விளம்பரங்களுக்காக மட்டுமே சில கோடிகள் செலவு செய்கிறோம், இப்படிக் கோடிகளில் செலவு செய்துவிட்டு, 21 இலட்சத்துக்காக வெளிநாட்டுஉரிமையைக் கொடுத்தோமென்றால், அங்கு அப்படம் ஒடுகிறதோ இல்லையோ இங்கு ஓடுவதைக் கெடுக்கிற மாதிரி ஆகிவிடுகிறது.

எனவே எங்களுடைய எந்தப்படத்துக்கும் வெளிநாட்டுஉரிமை கொடுப்பதாக இல்லை, இது எங்களுடைய தனிப்பட்ட நலன் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் நன்மைபயக்கக்கூடிய விசயத்தைத்தான் நாங்கள் செய்கிறோம் என்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

சமூக வலைதளத்தில் எதிரிகளை தாங்களே உருவாக்குகிறார்களா ட்ரம்ப்பும், மோடியும்?
[X] Close