Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாகுபலியையும் மீறி வசூலில் குறையாமல் இருந்ததா பாபநாசம்?

கமல் கௌதமி நடித்த பாபாநாசம் ஜூலை 3 ஆம் தேதி வெளியானது. ஏற்கெனவே மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடமொழிகளைப் போல தமிழிலும் நல்லவரவேற்பைப் பெற்றது. வரவேற்பு மட்டுமின்றி வசூலும் நன்றாக இருந்ததென்று சொல்லப்பட்டது.

இப்போதெல்லாம் ஒரு படம் பெரியவெற்றி என்றாலும் ஒரு வாரம் நன்றாக வசூலித்தாலே போதும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாபநாசம் படம் வெளியான அடுத்தவாரம் பாகுபலி படம் வெளியானது. அதுவும் பிரமாணட் வெற்றியைப் பெற்றிருக்கிறது. அதற்கடுத்த வாரமான ஜூலை 17 இல் தனுஷ் நடித்த மாரி வெளியானது.

அந்தப்படமும் முதல்மூன்றுநாட்கள் நல்ல வசூலைப் பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். பாபநாசம் படத்துக்குப் பிறகு இரண்டு பெரியபடங்கள் வந்திருந்தபோதும் பாபநாசம் படத்துக்கும் கூட்டம் வந்துகொண்டிருந்தது என்று சொல்கிறார்கள்.

அதன்விளைவாக பாபநாசம் படம் நூறுகோடி வசூலித்து 100கோடி க்ளப்பில் சேர்ந்துவிட்டதென்று அந்தப்படத்தில் முக்கியவேடத்தில் நடித்திருக்கும் ஆனந்த்மகாதேவன் தன்னுடைய முகநூலில் பதிவிட்டிருக்கிறார். பாகுபலி படம் வெளியாகி அதுபற்றியே எல்லாப்பக்கமும் பேச்சாக இருந்தபோதும் சத்தமில்லாமல் பாபநாசம் படமும் ஓடியிருக்கிறதென்றால் ஆச்சரியமான செய்திதான்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்