Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ரஜினிக்கு வில்லன் சக்கரவர்த்தி?

ரஜினி நடிக்கும் படம் பற்றியான செய்திகளையும், நடிக்கும் நடிகர்களையும் ரகசியமாகவே வைத்திருப்பார்கள் படக்குழுவினர். இருப்பினும் ஒவ்வொரு தகவலாக வெளியாவது வழக்கமே. அதன் அடிப்படையில் படத்தின் பெயர் காளி என்று ஒரு செய்தி பரவிவந்தது.

அடுத்ததாக ரஜினிக்கு வில்லனாக தெலுங்கின் பிரபல நடிகர் ஜெ.டி. சக்கரவர்த்தி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விஷால் நடித்த சமர் படத்தில் சைக்கோ வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே படத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்து வில்லனாக ஜெ.டி.சக்கரவர்த்தி நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ரஜினி - ரஞ்சித் படத்திற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் மலேசியாவில் ஆரம்பமாகவிருக்கிறது.

இது மலேசிய கேங்க்ஸ்டர் படம் என்று சொல்லப்படுவதால் சக்ரவர்த்திக்குப் பொருத்தமான வேடம் அமைந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!
[X] Close