Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயக்குநர் மீது கடுங்கோபத்தில் இருக்கும் தனுஷ்!

இயக்குநர்களுக்கு மிக நெருங்கிய நடிகர் என்றால் கண்டிப்பாக சொல்லலாம் அது தனுஷ் தான். இயக்குநர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ தோற்றமாகட்டும், நடிப்பாகட்டும் அப்படியே திரையில் கொண்டுவந்துவிடுவார். அந்த வகையில் இவருடைய நடிப்பு இந்தி இயக்குநர்களுக்கே பிடித்துப் போன ஒன்று. 

ஆனால் இப்படி ஃப்ரண்ட்லி நடிகரான தனுஷ் தற்போது ஒரு இயக்குநர் மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம். வேறு யாருமில்லை இவருக்கு இந்தியில் அறிமுகம் கொடுத்த ஆனந்த் எல்.ராய் தான். தனுஷ் நடித்த ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் சமீபத்தில் தன் இயக்கத்தில் மாதவன் , கங்கணா ரணாவத் நடிப்பில் தனு வெட்ஸ் மனு படத்தை வெளியிட்டார். 

இந்த படத்தில் நட்புக்காக ஒரு சில காட்சிகளில் தனுஷ் நடித்துக் கொடுத்துள்ளார். ஆனால் தனுஷின் பார்வைக்கு கொண்டுவராமலேயே படத்தில் தனுஷின் காட்சிகளை நீக்கி விட்டாராம் இயக்குநர் ஆனந்த். இந்நிலையில் படத்தின் ரிலீஸின் போது தனுஷ் அந்த படத்தின் டிரெய்லர், டீஸர் உள்ளிட்டவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்துகளை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் தனுஷ் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
[X] Close