Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசியலில் சேரமாட்டேன் என்று த்ரிஷா விளக்கம் அளித்தது எதனால்?

சமீபத்தில் நடிகை த்ரிஷா அதிமுகவில் இணையவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. கமல், அஜித், விஜய், உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி மலையாள, தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளின் பல படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை கடந்த 15 வருடங்களாக தக்க வைத்து வருகிறார் நடிகை த்ரிஷா. 

இந்நிலையில் த்ரிஷா அரசியலில் சேரவிருக்கிறார் எனவும், அதிமுக கட்சியில் இணைகிறார் எனவும் செய்திகள் வெளியாகிவருகின்றன. இதற்கு தற்போது த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டிப்பாக நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என ட்வீட் செய்துள்ளார். 

அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவுடன் இருக்கும் படத்தை அட்டைப்படமாக வைத்ததைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக இந்தப்பேச்சு இருந்தது. தொடக்கத்தில் இதைப்பற்றிக் கண்டுகொள்ளாமல் இருந்தாராம் த்ரிஷா. ஆனால் அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படக்குழுவினர் மத்தியிலும் இந்தக்கேள்விகள் வந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு,’சமீபத்திய செய்திகளின்படி, நான் அரசியலில் இணையப்போவதில்லை, இப்போதும் சரி எதிர்வரும் காலங்களிலும் சரி’ என தெளிவாக வெளியிட்டுள்ளார். எனினும் முன்னணி நடிகைகள் பலரும் நடிக்கும் வாய்ப்பு குறையும் தருவாயில் அரசியலை நாடுவது குறிப்பிடத்தக்கது.  பொறுத்திருந்து பார்ப்போம். 

எடிட்டர் சாய்ஸ்

[X] Close