Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஷங்கர்-ரஜினி படத்துக்கு 27 உதவிஇயக்குநர்கள்?

  ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படப்பிடிப்பே இன்னும் தொடங்கவில்லை. இருந்தாலும் அதற்கடுத்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் வேலைகள் தொடங்கிவிட்டனவாம். நடிகர், நடிகையர் தேர்வுகள் தாண்டி இப்போது படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்யும் வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றனவாம்.

முதல்கட்டமாகச் சென்னையிலேயே படப்பிடிப்பு நடக்கும் போலிருக்கிறது, இப்போது சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் இடங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்களாம். இதுவரை தமிழ்த்திரையுலகில் இல்லாத பெரியபட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இந்தப்படத்தில் இதுவரை இல்லாத வகையில் புதியவிசயமொன்றும் நடக்கவிருக்கிறதாம்.

இந்தப்படத்தில் ஷங்கருக்கு உதவியாக இயக்குநர்குழுவுக்கு மட்டும் 27 பேரைத் தேர்வு செய்கிறார்களாம். அதேபோல பத்து தயாரிப்புமேலாளர்களையும் தேர்வு செய்திருக்கிறார்களாம். உதவிஇயக்குநர்கள் குழு மற்றும் தயாரிப்புமேலாளர்கள் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இருப்பது இந்தப்படத்தில்தான் என்று சொல்கிறார்கள். சுமார் மூன்றாண்டுகள் இந்தப்படத்தின் வேலைகள் நடக்கவிருக்கின்றன என்பதால் இவ்வளவு முன்தயாரிப்புகள் நடக்கின்றன என்றும் சொல்கிறார்கள்.

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்