Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஷாலோடு மோதுகிறார் அனுஷ்கா!

  பாகுபலி படத்தில் அனுஷ்காவை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என்கிற குறையைப் போக்க ஆந்திராவிலிருந்து அடுத்தபடம் தயாராகிவிட்டது. ஒக்கடு உட்பட நிறைய வெற்றிப்படங்களை இயக்கிய குணசேகர் இயக்கியிருக்கும் இந்தப்படத்தில் அனுஷ்கா, ராணா, பிரகாஷ்ராஜ், நித்யாமேனன், கேத்தரின்தெரசா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

முன்பே வெளியாகியிருக்கவேண்டிய இந்தப்படம் பாகுபலி வெளியீட்டுக்காகக் காத்திருந்தது என்று சொல்லப்பட்டது. இப்போது இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறார்கள். செப்டம்பர் நான்காம்தேதி இந்தப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மிகுந்த பொருட்செலவில் பெரியஅளவில் தயாராகியிருக்கும் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஆளாகியிருக்கிறது. அதே செப்டம்பர் நான்காம்தேதி சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் பாயும்புலி படம் வெளியாகும் என்று எற்கெனவே சொல்லப்பட்டிருக்கிறது.

இரண்டும் பெரியபடங்கள் என்பதால் கடும்போட்டி நிலவக்கூடும் என்கிறார்கள். பாகுபலி படத்தின் வெற்றி ருத்ரம்மாதேவிக்குப் பலம், சுசீந்திரன் விஷால் கூட்டணி என்பதும், அது நேரடித்தமிழ்ப்படம் என்பதும் பாயும்புலிக்குப் பலம். இரண்டு பலமான படங்களுக்கிடையேயான போட்டியால் ரசிகர்களுக்கு உற்சாகம்தான். 

 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close