Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தல57' இயக்கப்போவது யார்?

என்னை அறிந்தால் படத்தையடுத்து அஜித் 'வீரம்' சிவா இயக்கத்தில் ஆக்‌ஷன் கதைக்களத்தில் நடித்துவருகிறார். படத்தின் நாயகிகளாக ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன் நடித்துவரும் இந்த படத்தில் சூரி , உள்ளிட்டோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தையடுத்து அஜித்  என்ன படம் நடிப்பார் யார் இயக்கம் என இப்போதே கேள்விகள் எழத்துவங்கிவிட்டன. இவர் அடுத்த படத்தை சத்ய ஜோதி நிறுவனத்திற்காக நடிக்கிறார் என்பது மட்டுமே தற்போது உறுதியாகியுள்ளது.

மற்றப்படி எந்த இயக்குனர் என்பது இன்னும் முடிவாகவில்லை, சமீபத்தில் சுசீந்திரன், கே.வி.ஆனந்த், சுரேஷ் கிருஷ்ணா, வினோத் என இயக்குநர்கள் அவரா இவரா என பேசப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பவர் விக்ரம் குமார்.

இவர் தமிழில் யாவரும் நலம் படத்தை இயக்கியவர். தற்போது சூர்யா, சமந்தா நடிப்பில் ’24’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இவர்தான் தெலுங்கில் வெளியான மெகா ஹிட் ‘மனம்’ படத்தை இயக்கியவர். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close