Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பாகுபலி பாகம் 2: சில ரகசியங்கள்!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி மெகா ஹிட்டடித்த படம் ‘பாகுபலி’. இந்த படத்தின் முதல் பாகத்தில் எதிர்பாரா முடிவாக அடுத்த பாகத்திற்கு இணைப்பு கொடுத்து அனைவரையும் அடுத்த பாகத்திற்காக காத்திருக்கச் செய்துவிட்டார்  இயக்குநர் ராஜமௌலி.

2016ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட அடுத்த பாகத்தின் தகவல்கள் தற்போது கசியத்துவங்கிவிட்டன.  ஏற்கனவே 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் 15ம் தேதி தொடங்க உள்ளது.

அனுஷ்கா, பிரபாஸ், ராணா போன்றவர்கள் தற்போது பிஸியாக உள்ளதால் படப்பிடிப்பை செப்டம்பர் மாதம் தள்ளிவைத்துள்ளார் ராஜமௌலி. மேலும் அனுஷ்காவின் உடல் எடையும் தான்  நடித்து வரும் ‘இங்சி இடுப்பழகி’ படத்திற்காக வெகுவாக கூட்டியுள்ளதால் படப்பிடிப்புக்கு தற்போது இடைவெளி விட்டுள்ளார் ராஜமௌலி.

அடுத்த பாகத்தில் பிரபாஸ், ராணா மோதும் மிக பிரம்மாண்டமான போர் காட்சிகளை படமாக்க உள்ளனராம். மேலும் அனுஷ்காவை வயதான கெட்டப்பிலேயே முதல் பாகத்தில் காட்டிய ராஜமௌலி அடுத்த பாகத்தில் முதல் பாகத்தின் ரம்யாகிருஷ்ணன் அளவிற்கு வீர வசனங்களும், பாடல் காட்சிகளும் வைத்துள்ளாராம். இப்படத்தை அடுத்த ஆண்டு ஜூலை 10ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close