Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தனுஷின் அடுத்த திட்டம்?

 பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் , காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ ஷங்கர், நடிப்பில் வெளியான படம் ‘மாரி’ படத்திற்கு இசை அனிருத். தனுஷின் முந்தைய படங்களான ஷமிதாப், மரியான், விஐபி படங்களை ஒப்பிடுகையில் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 

வசூல் ரீதியில் படம் நன்றாக போய்க்கொண்டிருப்பதாக படத்திற்கு நெருங்கிய வட்டாரங்கள் தகவல்கள் கொடுத்துள்ளனர். இதற்காக மொத்த படக்குழுவுக்கும் தனுஷ் தங்கச் சங்கிலி பரிசு கொடுத்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் மாஸ் விஷயங்கள் தனுஷ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளதால் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாம் என முடிவு செய்துள்ளனராம். இதே பாணியில் விஐபி ஹிட்டடித்ததால் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் படத்தை விஐபி2 என்ற பெயரிலேயே படக்குழு எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. 

எனினும் விஐபி அளவிற்கு மாரி ரசிக்க வைத்த படமா என கேள்விகள் எழுந்துள்ளன. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்