Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்த்திக்சுப்புராஜின் அடுத்த படம் அவியல்

பிட்சா, ஜிகர்தண்டா படங்களின் மூலம் அறியப்பட்ட இயக்குனர் "கார்த்திக் சுப்பாராஜ்".  இவர் தொடங்கியிருக்கும்  "ஸ்டோன் பெஞ்ச்" நிறுவனத்தின் மூலம் ஆறு குறும்படங்களை தேர்ந்தெடுத்து ஒரு திரைப்படமாக வெளியிட்ட பெஞ்சுடாக்கீஸ் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்போது பெஞ்சு டாக்கீஸின் இரண்டாவது பார்ட் வெளியிட விருக்கிறோம் என்று சொல்கிறார் கார்த்திக்சுப்புராஜ். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது...

உலகளவில் வெளியிடவிருக்கும் அந்தப் படத்திற்கான டைட்டில் கேட்டு ரசிகர்களிடம் ஒரு போட்டி ஒன்றையும் நடத்தினோம்.என்னோட படங்கள் பிட்சா, ஜிகர்தண்டா என்று எல்லாமே உணவை மையப்படுத்தியே வைத்திருந்தேன். போட்டியில் ரசிர்கர்கள் அனுப்பிய டைட்டிலும் கூட சாப்பாடு சார்ந்தவையாகவே இருந்தன.

ஐந்து வித்தியாசமான கதையாக பெஞ்சு டாக்கீஸ் வரவிருப்பதால் “அவியல்” என்ற பெயரை தேர்ந்தெடுத்திருக்கிறோம். திருச்சியிலிருந்து ராஜ்குமார் என்பவர் அனுப்பிய இந்த டைட்டிலை   தேர்வு செய்திருக்கிறோம்.

இந்தப்படம் பெஞ்சு டாக்கீஸின் முதல் பெஞ்சை விட இன்னும் அதிக பொழுதுபோக்கு, அதிக சிரிப்பு, அதிக உழைப்புடன் வெளியாகவிருக்கிறது. சீக்கிரமே பெஞ்சு டாக்கீஸின் அவியல் விரைவில் உங்களைத் தேடி வரும்.

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close