Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அப்பாவுக்குத் தான் என் ஆதரவு - வரலட்சுமி அதிரடி!

 நடிகர் சங்க தேர்தல் ஒரு பக்கம் விஷால் அணி, மறு பக்கம் சரத்குமார் அணியென களமிறங்கி ஓட்டுகளை சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில் கார்த்தி, சிவகுமார், சூர்யா, நாசர், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பலரும் விஷாலுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளனர். இன்னொரு பக்கம் தனுஷ், சிம்பு, என சரத்குமார் பக்கமும் ஆதரவுகள் குவிந்து வருகின்றன. 

யார் பக்கம் யார் என்ற கேள்விகள் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கும் வேளையில் விஷால் முன்னால் சங்க உறுப்பினர் என்ற முறையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தே ஆதரவு திரட்டியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரத்குமாரின் மகளும், விஷாலின் சிறு வயது நண்பருமான வரலட்சுமி யார் பக்கம் என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.’

நேற்று முன்தினம் கேரள அரசு தெரு நாய்களை கொலை செய்து வருவதைக் கண்டித்து விஷால் வரலட்சுமி உள்ளிட்டோர் பிராணிகள் வதைத் தடுப்பு அமைப்பினருடன் இணைந்து போராட்டம் நடத்தினர். இதில் வரலட்சுமியிடம் நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு எனக் கேட்க விஷாலையும் அருகிலேயே வைத்துக்கொண்டு அப்பாவுக்குத்தான் என் ஆதரவு எனக் கூறினார். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்