Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அஜித் படப்பிடிப்பு இரத்துச்செய்யப்படவில்லையா?

திரைப்படத்தொழிலாளர்களுடன் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஜூலை 27 முதல் படப்பிடிப்புகளை இரத்துச் செய்திருக்கிறது தயாரிப்பாளர்கள்சங்கம். இதன் காரணமாக சென்னையில் நடைபெற்றுக்கொண்டிருந்த கமலின் தூங்காவனம், விஜயசேதுபதியின் இறைவி உட்பட சுமார் முப்பது படங்களின் படப்பிடிப்புகள் இரத்தானதாகச் சொல்லப்படுகிறது.

சிறுத்தைசிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்துகொண்டிருந்தது. அந்தப்படப்பிடிப்பு என்னவாச்சு? என்றால், ஏற்கெனவே கடும்மழை காரணமாக அங்கு திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்தமுடியாத சிக்கல் இருந்ததாம்.

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கிணங்க படப்பிடிப்பை நடத்தால் நிறுத்திவைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் படக்குழுவினர் யாரும் சென்னை வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இப்போதும் திரைப்படத்தொழிலளார்களுடன் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அது இன்றே அல்லது ஓரிருநாட்களில் சுமுகமாக முடிந்துவிட்டால் உடனடியாகப் படப்பிடிப்புகள் தொடங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. அதற்குள் அவ்வளவு பேரையும் சென்னைக்கு வரவழைத்து அதன்பின் திருப்பி அனுப்புவது பெரியவேலையாகிவிடும் என்பதால் அவர்களை அங்கேயே இருக்கச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

[X] Close