Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’புலி’ டைம் மெஷின் படமா?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் , ஸ்ரீதேவி, சுதீப், உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘புலி’ . இந்த படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி இப்போதுவரை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

மேலும் தென்னிந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட டீஸராக ‘புலி’ டீஸர் இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் கதை குறித்து நெருங்கிய வட்டாரங்களில் சில தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

படம் முன் ஜென்மக் கதை என்றும், இடைவேளைக்கு முன்பு நிகழ்காலப் படமாகவும், இடைவேளைக்குப் பின் முன் ஜென்மப் படமாகவும் இருக்கலாம் எனக் கூறப்பட்டு வருகிறது. மேலும் பலரும் இது டைம் மெஷின் சார்ந்த கதை எனவும், விஜய்யின் பரம்பரைக் கதையே அரச கால கதை எனவும் கூறப்படுகிறது. 

எனினும் இவ்விரு கான்செப்டுகளையும் வைத்து தெலுங்கில் மஹதீரா, தமிழில் இன்று நேற்று நாளை படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்