Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜய்சேதுபதி படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகுமா?

 பீட்சா, சூது கவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஆகிய படங்களின் மூலம்  பெரிய அளவிற்கு முன்னேறினார் விஜய்சேதுபதி.  இப்போதைக்கு இவருக்குப் போட்டியாக எண்ணப்படும் சிவகார்த்திகேயனோ சரியான இடைவெளியில் படங்களைக் கொடுத்து வரும் நிலையில் விஜய் சேதுபதியின்  படங்கள் இன்னும் வெளியாகாமலேயே உள்ளன. 

மேலும் சமீபகாலமாக ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம், புறம்போக்கு ஆகிய  பெரிதாக படங்களும் பேசப்படவில்லை. மேலும் விஜய் சேதுபதி என்றாலே தனது கேரக்டர்களுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து வித்தியாசமாக நடித்தாலும் வசூலில் பெரிதாக இருந்தால்தான் ஹீரோவுக்கு மதிப்பு. அந்தவகையில் அண்மைக்காலப் படங்கள் அவருக்குக் கைகொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் இடம் பொருள் ஏவல், மற்றும் அவரது நடிப்புக்காகவும் ,கெட்டப்பிற்காகவும் எதிர்பார்க்கப்படும் ஆரஞ்சு மிட்டாய் படங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டி வருகிறார்களாம்.

31ம் தேதி வெளியாக உள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு இப்போது வரை 100 திரையரங்குகள் கூட உறுதியாகவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் அதே நாளில் ஜெயம் ரவியின் ‘சகலகலாவல்லவன் அப்பாடக்கர்’ மற்றும் விக்ரம் பிரபுவின் ‘இது என்ன மாயம்’ படங்கள் வெளியாக உள்ளன. எனவே தியேட்டர்கள் கிடைப்பதும் சிரமமாக இருக்கும் என்பதால் பட ரிலீஸை தள்ளிபோடலாமா என யோசித்து வருகிறதாம் படக்குழு. 

MUST READ

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!
[X] Close