Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“ராஜா இசைஞானி; எம்.எஸ்.வி இசை கடவுள்! கடவுளைப் பற்றி ஞானிக்குத்தான் தெரியும்” ரஜினி

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவாக இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு இசை நிகழ்ச்சி ஒன்றை காமராஜர் அரங்கில் நேற்று நடத்தினார்.

நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு எம்.எஸ்.வியின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார் இளையராஜா. பின்னர் இசைக் கலைஞர்களை வைத்து இசை நிகழ்ச்சியைத் துவங்கினார் இளையராஜா. முழு விழாவிலும் எம்.எஸ்.வியின் பாடல்கள் பாடப்பட்டன.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது, “ இளையராஜா இசைஞானி. ஆனால் எம்.எஸ்.வி. இசையின் சாமி. கடவுளைப் பற்றி இந்த ஞானிக்குத் தான் தெரியும். இளையராஜா தான் நமக்கு எம்.எஸ்.வி பற்றி சொல்ல வேண்டும். அதற்காகத்தான் அவர் நினைவைப் போற்றும் விதமாக இளையராஜா இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், பாலசந்தர், ஸ்ரீதர், டி.எம்.சவுந்தரராஜன், சீனிவாஸ், பி.சுசீலா என எல்லோரையும் புகழ் உச்சிக்கு கொண்டு சென்றவர் எம்.எஸ்.வி. தான். ராமருக்கு உதவிய அனுமன் போல் இருந்தாலும் ஒரு அணில் மாதிரியே வாழ்ந்தார். அப்படிப்பட்ட ஒரு மகானை நான் பார்த்தது இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை.

இது போன்ற நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு கிடைத்த ஆசீர்வாதம். திறமை என்பது கடவுள் தரும் பரிசு. தாய், தந்தையிடமிருந்து வருவது கிடையாது. சரஸ்வதி கடாட்சம் எம்.எஸ்.விக்கு கிடைத்திருக்கிறது. என்னதான் பணம், பெயர், புகழ் என்று இருந்தாலும் ஒரு துளி கூட தலைக்கனம் இல்லாமல் வாழ்ந்தவர். அதற்காகத்தான் அவரை இசைக் கடவுள் என்கிறோம். என்று பேசிமுடித்தார் ரஜினிகாந்த்.

'என்னுள்ளில் MSV ' எம்.எஸ்.விக்காக இளையராஜா நடத்திய இசை நிகழ்ச்சி - சிறப்பு ஆல்பத்திற்கு க்ளிக்குக

 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

[X] Close